விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட சந்தைதோப்பு பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட சந்தைதோப்பு பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆ.அண்ணாதுரை.துவக்கி வைத்தார்.
மருத்துவ முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை. பேசியதாவது.
முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுவருகிறது. தற்பொழுது பழங்குடியின மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பொதுமக்கள் மருத்துவ சேவைகள் பெற்று பயனடையும் வகையில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமில் பொதுமருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆலோசனை மையம், ஆய்வக மையம், மருந்தகம், காசநோய் பிரிவு, முழு உடல் பரிசோதனை பிரிவு, இரத்தப்பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை மையம் உள்ளிட்ட அரங்குகள் அமைத்து மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்த மருத்துவ சேவையினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறும் காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் இந்த முகாமினில் வழங்கப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை.இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வினில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர்.எஸ்.அனு. உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குநர் மரு.சண்முகக்கனி, துணை இயக்குநர் மரு.ஏ.செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.