சேலம்
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் 29.02.2020 (சனிக்கிழமை) அன்று கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் காலை 8.45 முதல் மாலை 4.45 வரை நடைபெறும் நடைபெறும் என ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டங்களில் புதிய கட்டிடத்திற்கான சொத்து வரி, காலி மனை வரி, மற்றும் குடிநீர் இணைப்பு , சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு, பாதாள சாக்கடை வைப்புத் தொகை, கட்டிட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் 29.02.2020 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெறும்.
மேலும் புதிய கட்டிடத்திற்கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, போன்றவைகளுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கம் பட்சத்தில் 7 நாட்களுக்குள் உரிய ஆணைகள் வழங்கப்படும். எனவே கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் மற்றும் நிலுவைத் தொகைகளை செலுத்தி, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.