புன்செய் புளியம்பட்டி
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் புன்செய் புளியம்பட்டி கெ.ஓ.ம.அரசு மகளிர் ஹாக்கி அணி (ஈரோடு அணி ) சாம்பியன் பட்டம் வென்றது.
ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் பள்ளி விளையாட்டு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.
நாக்கவுட் போட்டிகளில் ஈரோடு(புளியம்பட்டி) அணி காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் அணிகளை 7 - 0 என்ற கணக்கிலும், லீக் போட்டிகளில் திருப்பூர் அணியை 9 - 0 என்ற கணக்கிலும், திருவள்ளூர் அணியை 4- 0 என்ற கணக்கிலும் வென்றது. இறுதி போட்டியில் திருச்சி அணியை 2 - 0 என்ற கணக்கில் வென்று ஈரோடு அணி ஆறாவது முறையாக முதல்வர் கோப்பையை வென்றது.
புன்செய் புளியம்பட்டி கெ.ஓ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி அணியும் கோபி பிகேஆர் கலை அறிவியில் கல்லூரி ஹாக்கி அணியும் இணைந்து ஈரோடு அணி என்ற பெயரில் தொடர்ந்து மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று வருகிறார்கள்.
வெற்றி பெற்ற மாணவிகள் அனைவர்க்கும் தலா ௧ லட்சம் வீதம் மொத்தம் ௧௮ லட்சம் பரிசு கிடைத்தது.
தொடர்ந்து ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்றமைக்காக ஹாக்கி பயிற்சியாளர் அருள்ராஜ் அவர்களுக்கும் வெற்றி வீராங்கனைகளுக்கும் பள்ளி தலைமை ஆசிரியை உமா கௌரி, ஆசிரியர்கள், மாணவிகள், விடியல் அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் புளியம்பட்டி பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.