பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் : இந்திய தேசிய லீக் வலியுறுத்தல்

 


மாநில பொதுசெயலாளர் ஜகிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில்:


 டெல்லியில் அமைதியான முறையில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது சிஏஏ ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலால் அங்கு மிகப் பெரிய கலவரம் வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க் எரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


டெல்லியில் நடைபெற்ற வன்முறை திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தோடுவன்முறையை காவல்துறை அடக்க தவறிவிட்டது எனவும் நீதிமன்றம் குற்றசாட்டியுள்ளது. டெல்லி வன்முறை நாட்டையை உலுக்கியுள்ளதுஇதுபோன்ற சம்வங்கள் இனி நடைபெறக்கூடாது என அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆனால் இதற்கு எதிர்மறையாக தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  அதில் "கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில்தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக்களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


அதுமட்டுமில்லாது இதனை பேட்டியாக தாலைக்காட்சிகளுக்கு எச்.ராஜா அறிவித்துள்ளார்.அதில் வண்ணாரப்பேட்டை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறை அப்புறப்படுத்த வேண்டுமென காவல்துறையும் எச்.ராஜா மிரட்டியுள்ளார். எச்.ராஜாவின் இந்த ஆணவ பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது.


சிஏஏஎன்ஆர்சிஎன்பிஆருக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடி வரும் நிலையில்தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இஸ்லாமிய மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்கள் ஆதரவுடன் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய பெண்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள் மீது வன்முறையையும்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா பேசியிருப்பதுஅங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதி பூங்காவான தமிழகத்தில் மதகலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு இந்திய தேசிய லீக் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடுதமிழகத்தில் மதகலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் எச்,ராஜா மீது தமிழக காவல்துறை கைது நடவடிக்கை மேற்காள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 


Popular posts
தரமற்ற கால்நடை தீவனங்கள் விநியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட சந்தைதோப்பு பகுதியில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாம்
சேலம் மாநகராட்சி  கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான  சிறப்பு முகாம் 
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை அரசு முறையாக அறிவிக்கவில்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு